shadow

Awareness on Student Scholarship SC ST Cell 02.02.2023

Invitation Awareness on Student Scholarship SC ST Cell 02.02.2023                  view / download

அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் நோடல் அலுவலர்களுக்கு இனிய காலை வணக்கம். தற்போது 2022-23 ஆம் ஆண்டிற்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள SC/SCC மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கும் வகையில் கடந்த 30.01.23 அன்று முதல் இணையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர்களே விண்ணப்பிக்கும் வகையில் இணையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்லூரி முதல்வர்கள் மாணவர்கள் விண்ணப்பிக்கும் வரை காத்திருக்காமல்
நோடல் அலுவலர்களின் துணையுடன் தங்கள் கல்லூரியில் உள்ள கணினி ஆய்வகத்தை பயன்படுத்தி மாணவர்களை குழு, குழுவாக அமர வைத்து 04.02.23 -க்குள் புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை இணயத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் எத்தனை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை ஒவ்வொரு கல்லூரி முதல்வர்களும் தவறாமல் மாலை 3 மணிக்குள் இக்குழுவில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் தங்களால் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களிடம் தினந்தோறும் மாலை 4 மணிக்கு காணொளி வழியாக ஆதிதிராவிட நல இயக்குனர் அவர்களால் ஆய்வு செய்யப்பட உள்ளது. எனவே அனைத்து கல்லூரி முதல்வர்களும் இப்பொருள் மீது சிறப்பு கவனம் செலுத்தி இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான இணைய முகவரி, மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறை குறித்த மாதிரி செயல் விளக்க வீடியோ மற்றும் கல்லூரி வாரியாக பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்த பட்டியல் ஆகியவை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி
-கண்காணிப்பாளர்.

Day College

Evening College

Translate »
Skip to content